இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
பாகுபலி ரேன்ஞ்சுக்கு பாலிவுட்டில் உருவாகி வரும் படம் பிரம்மாஸ்திரா. சிவ பெருமானின் அக்னி அருள் பெற்ற ஒருவனின் சாகச பயணம் தான் படத்தின் கதை. இந்த படம் இரண்டு பாகமாக வெளிவருகிறது. முதல் பாகம் சிவா என்ற பெயரில் வருகிற 9ம் தேதி வெளிவருகிறது. இதில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜூனா, மவுனிராய் உள்பட பலர் நடித்திருக்கிறார். பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது.
அயன் முகர்ஜி இயக்கி உள்ள இந்த படத்தை கரண் ஜோஹர், ரன்பீர் ஆகியோர் நண்பர்களுடன் இணைந்து 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார்கள். இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு ரன்பீர் கபூர் அளித்த பேட்டி ஒன்று தற்போது படத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. அந்த பேட்டியில் அவர் தான் மாட்டு இறைச்சியை விரும்பி சாப்பிடுவதாக தெரிவித்திருந்தார்.
இதனால் வட இந்தியாவில் உள்ள சில அமைப்புகள் மாட்டு இறைச்சியை உண்ணும் ரன்பீர் கபூரின் படத்தை புறக்கணியுங்கள் (பாய்காட் பிரமாஸ்திரா) என்று கோஷத்தை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பாக ஹேஸ்டாக்கையும் உருவாக்கி உள்ளனர். இது படத் தயாரிப்பு தரப்புக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
அமீர்கான் நடித்த லால் சிங் சத்தா, அக்ஷய்குமார் நடித்த ரக்ஷா பந்தன் படங்கள் இதுபோன்ற பாய்காட் டிரண்டிங்கால் பெரும் தோல்வி சந்தித்தால் இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. விரைவில் இதுகுறித்து படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து விளக்க அறிக்கை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.