ராமாயணா படம் குறித்த எதிர்மறை ரீல் வீடியோவை லைக் செய்த பிரியங்கா சோப்ரா : அதிர்ச்சியில் நெட்டிசன்கள் | ஆரம்பத்தில் எனக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தது என்கிறார் சாய்பல்லவி | வட அமெரிக்காவில் 30 மில்லியன் வசூல் கடந்து 'ராமாயணா' புதிய சாதனை | டிசம்பர் 2026ல் எந்ததெந்த படங்கள் வருகிறது…. | அப்பா, மகன் இருவருக்குமே கிடைத்த மிதமான வெற்றி | நம்ம ஊரு பாட்டுக்காரன்… நடிகர் ராமராஜனின் 40 ஆண்டுகள்! | 90 அடி உயரத்தில் இருந்து குதித்தபோது இதுதான் கடைசி என நினைத்தேன் : ராஷ்மிகா மந்தனா | ஆஸ்திரேலியாவில் ஆசிரியையாக பணியாற்றும் 80களின் பிரபல குழந்தை நட்சத்திரம் | சாப்டர் 1 பட வரிசையில் புதிதாக இணைந்த ஜெயசூர்யாவின் மாயன் : டிச., 3ல் ரிலீஸ் | ஏழு வருடத்திற்கு பிறகு கோவிந்தாவை மீண்டும் நடிப்புக்கு அழைத்து வரும் அட்லி? |

2003ல் வெளிவந்த 'புட்பாத்' ஹிந்திப் படம் மூலம் நடிகரான அறிமுகமானவர் இம்ரான் ஹஷ்மி. அடுத்தடுத்து சில படங்களில் நடித்தாலும் 2007ல் வெளிவந்த 'ஆவராப்பன்' படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அப்படம் வியாபார ரீதியாக தோல்வியடைந்த ஒரு படம்.
இத்தனை வருடங்களாகத் திரையுலகில் இருக்கும் இம்ரான் முதல் முறையாக 100 கோடி வசூலைப் பெற்றுள்ளார். நிதின் கக்கர் இயக்கத்தில் இம்ரான் ஹஷ்மி, திஷா படானி, ஷபனா ஆஸ்மி மற்றும் பலர் நடித்த 'ஆவாரப்பன் 2' படம் கடந்த வாரம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது.
வெளியான 5 நாட்களிலேயே 100 கோடி வசூலைக் கடந்த படம், தற்போது உலக அளவில் 150 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்த வருடம் வெளிவந்த ஹிந்திப் படங்களில் 6வது 100 கோடி படமாக இப்படம் அமைந்துள்ளது.
இதற்கு முன்பு வெளிவந்த 'துரந்தர் 2' படம் 1800 கோடி, 'பார்டர் 2' படம் 450 கோடி, 'பூத் பங்களா' படம் 240 கோடி, 'தமால் 4' படம் 220 கோடி, 'வெல்கம் டு த ஜங்கிள்' படம் 180 கோடி வசூலைப் பெற்றுள்ளன. 'காக்டெயில் 2' படம் 140 கோடி, 'ராஜா ஷிவாஜி' படம் 130 கோடி வசூலையும் கடந்துள்ளன.




