பிளாஷ்பேக் : குறுகிய காலத்தில் காணாமல் போன 'ஆவாரம்பூ' | 20வது ஆண்டில் 'சூப்பர் சிங்கர்' : பிரம்மாண்ட சீசனாக ஒளிபரப்பாகிறது | சினிமா ஆனது அரிகொம்பன் வாழ்க்கை | கிராமி விருது போட்டியில் பாரதியார் பாடல் | நான் அம்மா செல்லம், அப்பா உடன் இணைந்து நடிக்க ரெடி : துல்கர் சல்மான் | இந்தியா சார்பாக ஆஸ்கர் அடிக்குமா 'கோந்தல்'? : படத்தில் அப்படி என்ன ஸ்பெஷ்! | கதை தேர்வில் தவறு செய்ததை ஒப்புக்கொண்ட ஸ்ரீலீலா | சர்வதேச விருதுகளை அள்ளிக்குவித்த தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட் படங்கள் | சன்னி தியோலின் சூர்யா வெளியீடு ஒத்திவைப்பு : நீதிமன்றத்தில் தடை கோரிய மருத்துவ சங்கம்! | மைசா படத்தின் விளம்பரப் பணிகளில் இறங்கப்போகும் ராஷ்மிகா |

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, பாலிவுட் பிரபலங்கள் தங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, ஹிந்தி நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை அடுத்து சல்மான்கானுக்கு செக்யூரிட்டி பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய தகவல்களின்படி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அக்ஷய் குமார் தனது பங்களாவில் குண்டு துளைக்காத புல்லட் ப்ரூப் ஜன்னல்களைப் பொருத்தியுள்ளார். அவரை தொடர்ந்து தற்போது ராமாயணா படத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூருக்கும் ஒரு மிரட்டல் செய்தி வந்ததாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் இப்போது அவருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.
இப்படி மிரட்டல் பட்டியல் அதிகரித்து வருவதால் தற்போது பாலிவுட்டின் இன்னும் பல முக்கிய நடிகர்களும் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகிறார்கள். அதோடு பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு முன்னுரிமை அளிப்பதால் டோட்டல் பாலிவுட்டே பதட்டத்தில் காணப்படுகிறது.