இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் மிகவும் பிரபலமடைந்தவர் விஜய் தேவரகொண்டா. தமிழிலும் நோட்டா படத்தின் மூலம் அறிமுகமானார். தென்னிந்திய அளவில் பிரபலமாகி உள்ள அவர் அடுத்து ஹிந்தியிலும் பிரபலமாகப் போகிறார்.
தெலுங்கின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ள புதிய படமான லைகர் படத்தின் முதல் பார்வையை இன்று(ஜன., 18) வெளியிட்டுள்ளனர். இப்படத்தை தெலுங்கு, ஹிந்தியில் ஒரே நேரத்தில் படமாக்க உள்ளார்களாம். மேலும், படம் தமிழ், மலையாளம், , கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது என அறிவித்துள்ளார்கள்.
படத்தை பிரபல ஹிந்தி இயக்குனரான கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் அறிவிப்பு பற்றி விஜய் தேவரகொன்டா டுவிட்டரில், “எங்களது இந்திய வருகையை அறிவிக்கிறோம். என்னைப் போன்ற பின்னணி உள்ள ஒருவர், இங்குள்ள சில விதிமுறைகளின்படி எந்த விதத்திலும் சென்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால், வெறித்தனமான பைத்தியம், ஆர்வம், கடின உழைப்பு ஆகியவற்றால் இங்கே இருக்கிறோம். என்னைப் போல் உள்ளவர்கள், பெரிதாக கனவு காணுங்கள், நம்பிக்கை வையுங்கள் அது நிச்சயம் நடக்கும்,” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.