பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

படம் : மவுனம் பேசியதே
வெளியான ஆண்டு : 2002
நடிகர்கள் : சூர்யா, நந்தா, த்ரிஷா
இயக்கம் : அமீர்
தயாரிப்பு : அபராஜீத் பிலிம்ஸ்
பருத்திவீரன் தந்த அமீரின் முதல் படம், மவுனம் பேசியதே! ஜோடி படத்தில், சிம்ரனின் தோழியரில் ஒருவராக நடித்த த்ரிஷா, கதாநாயகியாக அறிமுகமான படம், இது தான்.
சூர்யாவும், நந்தாவும் நண்பர்கள். நந்தாவிற்கும், த்ரிஷாவிற்கும் திருமணம் நடத்த, அவரது பெற்றோர் விரும்புகின்றனர். நந்தா, வேறொரு பெண்ணை விரும்புகிறார். இந்நிலையில் த்ரிஷா, தன்னை காதலிப்பதாக, சூர்யா நினைக்கிறார். இந்த காதல் சதுரங்கம், சுமுகமாக நிறைவடைந்தால், அது தான் மவுனம் பேசியதே!
'எங்கே பார்த்தாலும் உங்க தொல்லை தாங்க முடியலையே...' என, காதலை வெறுக்கும் ஒருவன், காதலினால் எவ்வாறு மாறுகிறான் என்பதை, சூர்யா தன் உடல் மொழியால், மிக அழகாக வெளிப்படுத்தி இருந்தார். சூர்யாவின் நண்பராக நந்தா. 'பிளைபாய்' என, சுற்றும் கதாபாத்திரம். இருவரும் இடம்பெரும் காட்சிகளில், கிண்டல்கள் தெறிக்கவிட்டன. படத்தை நிறைவாக முடித்து வைக்கும் பணி, லைலாவிற்கு. அதிவேகமாக காரை இயக்கி, கண்ணாடி இறக்கி, புன்னகையுடன் லைலா வரும்போது, அவ்வளவு சந்தோஷம் ரசிகர்களுக்கும்.
காதலுக்கு எதிராக சூர்யா பேசும்போதெல்லாம், தியேட்டரில் கைத்தட்டல் பலமாக எழுந்தது. குறிப்பாக, கல்யாண மண்டபத்தில் நடக்கும் களேபரம் எல்லாம், செம துாள். ராம்ஜியின் ஒளிப்பதிவு, எளிமையான காட்சியையும், பிரமாண்டமாக காட்டியது.
யுவன் சங்கர் ராஜா இசையில், 'ஆடாத ஆட்டம் எல்லாம், அறுபது ஆயிருச்சு, சின்ன சின்னதாய், என் அன்பே என் அன்பே...' உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இப்படம் தெலுங்கில், ஆதந்தே அடோ டைப் என, 'ரீமேக்' செய்யப்பட்டது.
நமக்கென்ன கிடைக்கும் என்பது, ஏற்கனவே எழுதியிருக்கும்... அது தான், மவுனம் பேசியதே!