டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மீரா ஜாஸ்மின் ரீ என்ட்ரி ஆகியுள்ள படம் மகள். இதில் அவருடன் ஜெயராம், தேவிகா சஞ்ய் உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 29ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் அம்மா மகளின் உறவு மிக அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மகளாக நடித்துள்ள தேவிகா சஞ்சய் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார். இது தொடர்பாக அவர் மீடியாக்களிடம் பேசும்போது ஆனந்த கண்ணீர் வடித்தார். அந்த வீடியோவும், படமும் வைரலாகி வருகிறது.
அவர் கூறியிருப்பதாவது: எனது இதயம் நிறைந்துள்ளது. படப்பிடிப்பின் கடைசி நாளில் நான் அழுதேன், இன்றுவரை அழுது கொண்டிருக்கிறேன். எனது கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனது முதல் படமே வெற்றிப் படமாகவும், எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்த படமாகவும் அமைந்தது இறைவன் கொடுத்து வரம்.
சத்யன் சார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், சீனிவாசன் சார், சித்திக் சார் உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி, உங்களோடு திரையை பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி . என்று கூறியுள்ளார் தேவிகா.