பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாள திரையுலகில் புருவ அழகி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரியா பிரகாஷ் வாரியர் கதாநாயகியாக அறிமுகமான படம் ஒரு அடார் லவ். ஒமர் லுலு இயக்கியிருந்தார். அதற்கு முன்பு அவர் இரண்டு ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் இந்த படம் அவரை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
இந்த நிலையில் தற்போது நல்ல சமயம் என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஒமர் லுலு. இந்த படம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியானது. அதேசமயம் படத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பாக அதை புரமோட் செய்துள்ளதாகவும் கூறி போதை பொருள் தடுப்பு துறை, ஒமர் லுலு மீது வழக்கு பதிந்துள்ளது.
சென்சார் அதிகாரிகள் அனுமதி தந்த பின்னரும் தன் மீது வழக்குப் பதியப்பட்டதில் உள்நோக்கம் இருக்கிறது என்றும் இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார் ஒமர் லுலு.
மேலும் தனது 'நல்ல சமயம்' படத்தை இந்த வாரத்துடன் தியேட்டர்களில் இருந்து வாபஸ் பெறப்போவதாகவும் இது குறித்து தானும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதால் இந்த வழக்கில் தனக்கு நல்ல தீர்ப்பு வந்த பின்னரே இந்த படத்தை மீண்டும் திரையிட போவதாகவும் கூறியிருந்தார் ஒமர் லுலு.. இந்த நிலையில் தற்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நல்ல சமயம் படம் தியேட்டர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.