துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விபுல் ஷா தயாரிப்பில், சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'தி கேரளா ஸ்டோரி'. இந்தியில் உருவாகி உள்ள இந்த படம் சர்ச்சைக்குரிய கதை அம்சத்தை கொண்டது. கேரளாவைச் சேர்ந்த 4 பெண்கள் விடுதியில் ஒரே அறையில் தங்குகின்றனர். அவர்களில் ஒருவர் முஸ்லிம் பெண். மற்றவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும். படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படியாக கேரளாவை சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டனர் என்றும் படம் கூறுகிறது.
இந்த படத்தின் டீசர் வெளியானது முதலே சர்ச்சையும் கிளம்பியது. குறிப்பாக கேரள முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. அத்துடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய 10 காட்சிகளையும் தணிக்கை அதிகாரிகள் நீக்கியுள்ளனர். இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வருகிற 5ம் தேதி (நாளை மறுநாள்) வெளியாகிறது. இதற்கு கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
கேரளா முஸ்லீம் யூத் லீக் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தி கேரளா ஸ்டோரி படத்தில் சொல்லப்பட்டுள்ளது உண்மை என யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் வெளியீட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டால் படத்தை வெளியிட தயாரிப்பாளருக்கு உரிமை இருக்கிறது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டது நீதிமன்றம்.