மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
மலையாள சினிமாவின் பழம்பெரும் நடிகர் பூஜாபுரா ரவி. 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 83 வயதான அவர் முதுமை தந்த உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இடுக்கி மாவட்டம் மறையூரிலுள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்த அவருக்கு , நேற்று காலை திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் மரணம் அடைந்தார். பூஜப்புரா ரவி மரணத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த பூஜப்புரா ரவி 1976 முதல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கள்ளன் கப்பலில் தன்னேக, ரவுடி ராமு, ஓர்மகள் மரிக்குமோ, அம்மிணி அம்மாவன், முத்தாரம்குன்னு பிஓ, கிலுக்கம் உள்பட 800க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.. கடைசியாக 2016ல் 'கப்பி' என்ற படத்தில் நடித்திருந்தார்.