பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் | ரஜினியின் முதல் படமும், 50வது ஆண்டு 'கூலி' படமும் வெளியாகும் ஒரே தியேட்டர் | நடிகர் சங்க பொதுச்செயலாளராக போட்டியிடுபவருக்கு எதிராக பரப்பப்படும் மெமரி கார்டு குற்றச்சாட்டு | சோதனை அதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு பின் மாஸ்க் கழட்டிய அல்லு அர்ஜுன் ; வைரலாகும் வீடியோ |
இயக்குனர் த்ரி விக்ரம் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குண்டூர் காரம். பூஜா ஹெக்டே, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாரிகா & ஹசைன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 2024 பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வருகிறது என்று அறிவித்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து தமன் விலகுகிறார் அவருக்கு பதிலாக இப்படத்தில் இசையமைக்க அனிருத் உடன் இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே கால்ஷீட் பிரச்னையால் விலகியதாக நேற்றில் இருந்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிபடுத்தவில்லை.