தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சமீபத்தில் 2022ம் வருடத்திற்கான 53 வது கேரளா அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கடந்த வருடம் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் மம்முட்டிக்கு சிறந்த நடிகர் என்கிற கேரள அரசு விருது அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி என்பவர் இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து மம்முட்டிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நடிகை பிராச்சி டெஹ்லான் என்பவர் மம்முட்டியை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
டில்லியை பூர்வீகமாகக் கொண்ட பிராச்சி டெஹ்லான் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான மாமாங்கம் என்கிற வரலாற்று படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கேரளாவுக்கு வருகை தந்துள்ள பிராச்சி டெஹ்லான் மம்முட்டியை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு ரசிகையாக நான் மாறிய தருணம் இது. கொச்சியில் இருக்கும் நிலையில் மம்முட்டியை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால் எப்படி ?. அவருடைய புன்னகை சுற்றிலும் இருப்பவர்களை வீழ்த்தி விடும். நீங்கள் அவரை பிரமித்து பார்ப்பீர்கள். நான் மம்முக்காவிடம் ஒரு ஹக் கேட்டேன்.. கேட்டது எனக்கு கிடைத்தது” என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.