23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
மலையாள திரையுலகில் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து கிடுகிடுவென முன்னணி வரிசைக்கு உயர்ந்து வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் தொடர்ந்து வித்தியாசம் காட்டி ரசிகர்களை ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தி வரும் டொவினோ தாமஸின் கைவசம் தற்போது ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. இதில் அடுத்ததாக அவரது நடிப்பில் அன்வேசிப்பின் கண்டத்தும் என்கிற படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் துப்பறியும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடிக்கிறார்.
கடந்த 2019ல் வெளியான கல்கி திரைப்படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த டொவினோ தாமஸ், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காக்கி யூனிபார்ம் அணிகிறார். அறிமுக இயக்குனரான திராவின் குரியாகோஸ் இயக்கியுள்ள இந்த படம் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக படு திரில்லிங்காக உருவாகியுள்ளதாம்.
இது குறித்து டொவினோ தாமஸ் கூறும்போது, ‛‛இதற்கு முன்பும் நான் சில போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இந்த படமும் இதன் திரைக்கதையும் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது” என்று கூறியுள்ளார்.