நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
மலையாளத்தில் உணர்வுப்பூர்வமான படங்களும் காமெடி, ஹாரர் படங்களும் அதிக அளவில் வெளியானாலும் சயின்ஸ் பிக்சன் படங்கள் என்று பார்த்தால் தமிழை விட ரொம்பவே குறைவான அளவில் தான் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் முதன் முறையாக மலையாளத்தில் டைம் டிராவலை மையப்படுத்தி ஒரு சயன்ஸ் பிக்சன் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இதில் கதாநாயகனாக மம்முட்டி நடிக்க இருக்கிறார் என்பதுதான் ஆச்சரியமான தகவல். ஏற்கனவே ஆவாஸ்யுகம், தி மேல் கோஸ்ட் என வித்தியாசமான கதைக்களங்களில் படங்களை இயக்கிய கிருஷந்த் இந்த படத்தை இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. 2024 மத்தியில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.