ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் |

மலையாள நடிகர் திலீப் தற்பொழுது ‛தங்கமணி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். பல விருதுகளைப் பெற்ற 'உடல்' என்கிற படத்தை இயக்கிய ரதீஷ் ரகுநந்தன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். நடிகை பிரணிதா சுபாஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தங்கமணி என்கிற கிராமத்தைப் பற்றியும் அந்த ஊரில் பல வருடங்களுக்கு முன்பு போலீஸ் ஸ்டேஷனில் நடைபெற்ற, அதேசமயம் அவ்வளவாக வெளியே தெரியாமல் போன ஒரு பாலியல் பலாத்கார கொலை மற்றும் அதன் பின்னணி பற்றியும் தான் இந்த படத்தின் மையக் கருவாக சொல்லப்படுகிறதாம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியானபோது இதுகுறித்த சில காட்சிகளும் அதில் இடம்பெற்று இருந்தன. இந்த நிலையில் தங்கமணி கிராமத்தைச் சேர்ந்த வி.ஆர்.பைஜூ என்பவர் தங்களது கிராமத்தைப் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கும் விதமாக இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்றும் அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் இந்த படம் வெளியானால் தங்களது கிராமத்தையே மற்ற நகரங்களில் இருந்து மக்கள் வேறுபடுத்தி பார்க்கும் கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தி விடும் அபாயம் இருக்கிறது என்றும் அதில் கூறியுள்ளார்.




