டிச., 18ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‛பராசக்தி' கண்காட்சி | அருண் விஜய்க்காக பாடிக் கொடுத்த தனுஷ் | நாட்டாமை டீச்சர் மகள் புரமோஷனுக்கு வரவில்லை | யோகிபாபு பட கால்ஷீட் : கன்னட நடிகர் சுதீப் கிண்டல் | மாதவன், கங்கனா படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு | மீண்டும் பாடகர் ஆக சிவகார்த்திகேயன் | ஜவுளிக்கடை ஊழியர்களுக்காக கும்கி பாடலை பாடி மகிழ்வித்த டி.இமான் | எம்.எஸ் சுப்புலட்சுமி பயோபிக்கில் சாய்பல்லவி? | வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு |

கிட்டத்தட்ட ஆறு படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ள மலையாள நடிகர் நிவின் பாலிக்கு இந்த வருடத்தில் இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை என்பதுதான் ஆச்சர்யம். கடந்த மே மாதம் நிவின்பாலி நடிப்பில் வெளியான மலையாளி ப்ரம் இந்தியா படம் வரவேற்பு பெறாத நிலையில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக டிச-25ஆம் தேதி அவர் நடித்துள்ள சர்வம் மாயா என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. அது மட்டுமல்ல ஏற்கனவே தமிழில் அவர் நடித்துள்ள ஏழு கடல் ஏழுமலை, மலையாளத்தில் நடித்துள்ள டியர் ஸ்டூடண்ட்ஸ், பேபி கேர்ள் உள்ளிட்ட படங்களும் தயாராகி ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றன.
இந்த நிலையில் அவர் பார்மா என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். அந்த வெப்சீரிஸ் வரும் டிசம்பர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஒன்றரை வருட காத்திருப்புக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நிவின்பாலியின் வெப் சீரிஸ் மற்றும் திரைப்படம் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாவது குறித்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.




