'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ‛களம் காவல்' என்கிற திரைப்படம் வெளியானது. ஜித்தின் கே.ஜோஸ் என்பவர் இயக்கிய இந்த படத்தில் மோகன்லால் பெண்களை ஏமாற்றி தொடர்ச்சியாக கொலை செய்யும் ஒரு சீரியல் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுநாள் வரை வில்லன் நடிகராக நடித்து வந்த விநாயகன் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை மம்முட்டியே தயாரித்துள்ளார். படம் வெளியான நாளிலிருந்து டீசண்டான வரவேற்பை பெற்று வருகிறது.
இந்திய அளவில் 40 கோடி வசூலித்துள்ள இந்த படம் வெளிநாடுகளில் மட்டும் அதற்கு இணையாக 38.5 கோடி வசூலித்துள்ளது. இதற்கு முன்பு அதாவது கொரோனா காலகட்டத்திற்கு முன்பு வெளிநாடுகளில் வெளியான மம்முட்டியின் படங்கள் செய்த வசூலை கொரோனாவுக்குப் பிறகு தற்போது தான் களம்காவல் வசூல் ஓவர்டேக் செய்துள்ளது. அது மட்டுமல்ல இதுவரை வெளிநாட்டு வசூலில் முன்னணி இடம் பிடித்துள்ள ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா', ‛எல் 2 ; எம்புரான்', ‛தொடரும்' மற்றும் ‛டயஸ் இரே' ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்த படம் ஐந்தாவதாக அந்த பட்டியலில் இணைந்துள்ளது.