'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் | 50 லட்சம் சம்பளத்தை விட்டு இலங்கை படத்தில் நடித்த டி.ஜே .பானு | கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி? |

மலையாள திரை உலகில் மறைந்த நடிகர் சுகுமாரனின் மனைவியும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் தனது மகன்கள் பிரித்விராஜ் மற்றும் இந்திரஜித் இருவரும் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வருவதை சந்தோஷத்துடன் கவனித்து வருகிறார். இளைய மகன் பிரித்விராஜ் மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் நடிக்க துவங்கி டைரக்ஷன், நடிப்பு என பிசியாக இருக்கிறார். அதேசமயம் மூத்த மகன் இந்திரஜித் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் சர்வம், என் மன வானில் உள்ளிட்ட இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை மல்லிகா சுகுமாரன் அளித்த ஒரு பேட்டியில், “எனது மூத்த மகன் இந்திரஜித் விரைவில் டைரக்ஷனில் இறங்கப் போகிறார், அதற்கான கதையும் தயாராகி விட்டது. தற்போது ஹிந்தியில் அனுராக் காஷ்யப்புடன் ஒரு படம் மற்றும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி டைரக்ஷனில் ஹிந்தியில் இன்னொரு படம் மற்றும் மலையாளத்தில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இவற்றை முடித்துவிட்டு அடுத்ததாக டைரக்ஷனிலும் இறங்க இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
தம்பியை போல அண்ணனும் டைரக்ஷனில் சாதிப்பார் என எதிர்பார்க்கலாம்.




