ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் |

மலையாளத்தில் கடந்த 2007ல் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் 'பிக் பி'. கேங்ஸ்டர் படங்களில் ஒரு புதிய பாணியில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குனர் அமல் நீரத் இயக்கியிருந்த இந்தப்படத்தில் மம்முட்டி பிலால் என்கிற கேங்ஸ்டராக நடித்திருந்தார். இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் பிலால் என்கிற பெயரில் உருவாக இருக்கிறது என கடந்த சில வருடங்களாகவே சொல்லப்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் அதற்கான அறிவிப்பும் வெளியானது.
ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்பதால் தற்போதைக்கு சாத்தியமில்லை என இந்தப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக இதே மம்முட்டி-அமல் நீரத் கூட்டணியில் 'பீஷ்ம பர்வம்' என்கிற புதிய படம் துவங்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் துல்கர் சல்மான் இந்தப்படம் குறித்த அறிவிப்பை மம்முட்டியின் பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கேரளாவுக்குள்ளேயே நடைபெற இருக்கிறதாம்.