பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கானா பிலிம் சேம்பர் சார்பாக ஒரு ஆலோசனைக் கூட்டம் ஹைதராபாத்தில் நடந்தது. அதில் ஓடிடியில் புதிய படங்களை நேரடியாக வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நானி நடித்துள்ள 'டக் ஜகதீஷ்' என்ற படம் செப்டம்பர் 8ம் தேதி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாவதற்கு தியேட்டர்காரர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு முன்பு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட, அக்டோபர் மாதம் வரை ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட வேண்டாம், தியேட்டர்களை முழுமையாகத் திறக்காமல் இருந்தால் ஓடிடிக்குச் செல்லுங்கள் என்றும் கூட பிலிம் சேம்பர் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனாலும், சில தெலுங்குப் படங்கள் அடுத்தடுத்து ஓடிடி நேரடி வெளியீட்டில் வர உள்ளதால் நேற்று மீண்டும் சந்தித்துப் பேசினர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய சில உறுப்பினர்கள் ஓடிடி வெளியீடுகளுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
பண்டிகை நாட்களில் ஓடிடியில் படங்களை வெளியிடக் கூடாது என்றும், அப்படி மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இது நானிக்கும் அவரது ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியைத் தந்தது. அதனால் சமூக வலைத்தளங்களில் கடும் வார்த்தைப் போர் எழுந்தது. அதையடுத்து தெலுங்கானா சினிமா தியேட்டர்கள் சங்கத்தினர் நானியிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.
அது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், “திரையுலக நன்மைகளுக்காகத்தான் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தோம். எங்களது செயலாளர் படங்களின் வெளியீட்டை சில நாட்கள் தள்ளி வைக்கவும், முன்னாடி வைக்கவும் தான் கோரிக்கை வைத்தார். யாருக்கு எதிராகவும் நாங்கள் இல்லை, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர். தியேட்டர்கள் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தன. பல தியேட்டர்காரர்கள் 'டக் ஜகதீஷ்' படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அப்படம் ஓடிடி வெளியீடு என்றதுமே சிலர் வெளிப்படையாகப் பேசிவிட்டனர். அது வேதனையின் வெளிப்பாடு, வேண்டுமென்றே யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவோ அல்லது அவர்களது தொழிலைப் பற்றி தரக்குறைவாகப் பேசவோ இல்லை. எங்கள் தியேட்டர்காரர்கள் சிலரை வேதனைப்படுத்தியிருந்தால் அதற்கு நாங்கள் எங்களது மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறோம். நம் திரையுலகத்தினர் அனைவரும் ஒரே குடும்பம். அதன் நன்மைக்காகத்தான் நாங்கள் பாடுபடுகிறோம், யாருக்கு எதிராகவும் நாங்கள் செயல்படவில்லை,” எனத் தெரிவித்துள்ளனர்.