பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தமிழில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் ஒரு நடிகராக அறிமுகமாகி பின் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்து தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன்.. அதேசமயம் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான டக் ஜெகதீஷ் படத்தில் முதலில் பின்னணி இசை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட தமன் திடீரென அந்தப்படத்தில் இருந்து வெளியேறினார்.. பின்னர் அவருக்கு பதிலாக மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான கோபிசுந்தர் அந்தப்படத்திற்கு பின்னணி இசையமைத்தார்.
தான் விலகியதற்கான காரணம் குறித்து தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார் தமன். அந்தப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்த தமன், பின்னணி இசை வேலையையும் முழுதாக முடித்து கொடுத்து விட்டாராம். ஆனால் நானிக்கு அவர் உருவாக்கிய பின்னணி இசை பிடிக்கவில்லை. அதனால் தான் அந்தப்படத்தில் இருந்து வெளியேறினேன் என கூறியுள்ள தமன், “எனது சினிமா பயணத்தில் இப்படி நடப்பது இதுதான் முதல் முறை. எல்லா படங்களுக்கும் இசையமைப்பது போன்று முழு அர்ப்பணிப்புடன் தான் இசையமைத்தேன்.. எந்த இடத்தில் அவர்களுக்கு தவறாக மாறிப்போனது என தெரியவில்லை” என கூறியுள்ளார்.