துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
வினோத் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'. இப்படத்தின் முதல் சிங்கிள் 'நாங்க வேற மாரி' மற்றும் படத்தின் முதல் முன்னோட்ட வீடியோ ஆகியவை இதற்கு முன்பு வெளியாகி உள்ளன. அதன்பின் எந்த ஒரு வீடியோவும் வெளியிடப்படவில்லை.
2022 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி இப்படம் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. இதனிடையே, இரண்டாவது சிங்கிள் இந்த வாரம் வெளியாகும் என்று சமூக வலைத்தளங்களில் சில நாட்களுக்கு முன்பே தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் இசை உரிமையைப் பெற்றுள்ள சோனி மியுசிக் நிறுவனம் “இன்று 7 மணிக்கு” என்று மட்டும் ஒரு அப்டேட் கொடுத்துள்ளது. இரண்டாவது சிங்கிள் பற்றிய அப்டேட் அப்போது வெளியாகலாம் எனத் தெரிகிறது. இரண்டாவது சிங்கிள் நாளை வெளியாகுமா என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.