சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் | உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் அதிர்ச்சி அளித்த பிரபல குணச்சித்திர நடிகர் | மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் | 'கேம் சேஞ்ஜர், ஹரிஹர வீர மல்லு' தோல்விகள் தரும் பாடம் என்ன? | தமிழ் சினிமாவின் 2025 வறட்சியை மாற்றுமா 'கூலி' | கதை பேசப்படணும், அதனல நடித்தேன் : காயல் பட அனுபவம் குறித்து அனுமோல் |
பிளாக் ஹவுஸ் பிக்சர்ஸ் சார்பில் எம்.மணிரத்னம் தயாரிக்கும் படத்தை குறும்பட இயக்குனர் ஏ.ஆர்.ஸ்டீபன் ராஜ் இயக்குகிறார். சந்தோஷ் பிரதாப், மாஸ்டர் மகேந்திரன், மைக்கேல் தங்கதுரை, வைஷ்ணவி , ராஜேஷ், லிவிங்ஸ்டன், சூப்பர் சுப்பராயன், கூல் சுரேஷ் நடிக்கிறார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஸ்டீபன் ராஜ் கூறியதாவது: இது ஒரு ஹைப்பர் லிங்க் பாணியிலான படம். இதற்கு முன்பு இதுபோன்ற கதைகள் வந்திருந்தாலும் இந்த படம் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஒரு சிலர் தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள், புதிய முயற்சி. ஏற்கெனவே பக்காவாக திட்டமிட்டிருப்பதால் குறுகிய காலத்தில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. என்றார்.