பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே | விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் |
சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சினிமாவுக்கு ஆஸ்கர் விருது போன்று இசைத் துறைக்கு இந்த விருது கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழாவில் இசைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும் விழா வருகிற 31ம்தேதி நடைபெறுவதாக இருந்தது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும் பாதிப்பு உள்ள சூழ்நிலையில் கிராமி விருது விழாவை தள்ளி வைக்க முடிவு செய்துள்னர்.
"உலகச் சிறந்த இசை கலைஞர்கள் கூடும் இந்த விழா அசாதாரண சூழ்நிலை கருதியும், இசை கலைஞர்கள், ரசிகர்களின் பாதுகாப்பு கருதியும் தள்ளி வைக்கப்படுகிறது. வருகிற மார்ச் 14ம் தேதி விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அப்போதுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உறுதி செய்யப்படும்" என்று விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர்.