ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி உள்ள படம் ஆர்ஆர்ஆர். இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்பட பலர் நடித்திருக்கிறார். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ள இந்த படம் நேற்று வெளிவருவதாக இருந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் ஆந்திராவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய கொமரா பீம், அல்லூரி சீதாராம ராஜு என்கிற வீரர்களை பற்றிய கதை. இந்த நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மேற்கு கோதாவரியை சேர்ந்த அல்லூரி சவும்யா என்பவர் தெலுங்கானா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீத்தாராமராஜு, கொமரா பீம் ஆகியோர் ஆங்கிலேயர்களிடம் வேலை பார்த்தது போன்று தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பாக படத்தை உருவாக்கி உள்ளனர். எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.