திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ஜெய்பீம் படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். சத்யராஜ், பிரியங்கா மோகன், சரண்யா, சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கிராமத்து கதையில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் ஆக்ஷன் கலந்த கதையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி சூர்யா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படம் வருகிற பிப்ரவரி 4ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.