துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் மாயோன். இதில் சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என்.கிஷோர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் முதல் சிங்கிளாக மயோனே மணிவண்ணா என்ற பக்தி பாடல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இதனை இளையராஜா எழுதியிருந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கொள்ளு பேத்திகள் பாடியிருந்தனர். இப்போது இதே படத்திற்காக 'சிங்கார மதன மோகனா..' என தொடங்கும் கிருஷ்ண பக்தி பாடலை எழுதி இசை அமைத்திருக்கிறார். ஸ்ரீநிதி ஸ்ரீ பிரகாஷ் பாடியிருக்கிறார். இந்த பாடலை நாம சங்கீர்த்தனம் பாணியில் உருவாக்கி இருக்கிறார் இளையராஜா.