மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ஸ்ருதிஹாசன் தமிழில் கடைசியாக எஸ்பி ஜனநாதனின் லாபம் படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. அவர் கையில் இப்போது தமிழ் படம் எதுவும் இல்லை. என்றாலும் இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் அவரது 107வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இதற்கிடையில் அவர் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார். கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இதனை இயக்குகிறார். ஸ்ருதியின் பிறந்த நாளையொட்டி இயக்குனர் பிரசாந்த் நீல் அவரது தோற்றத்தையும் கேரக்டர் பெயர் ஆத்யா என்றும் வெளியிட்டிருக்கிறார்.
இந்த படம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது. . புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.