துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அவரது ரசிகர்கள் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கும் விஜய் மக்கள் இயக்க தயாராகி வருகிறார்கள்.
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆட்டோ சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அவர்கள் ஒரு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
காரணம், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளுக்கு மட்டுமே பொதுவான சின்னம் வழங்கப்படும். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவில்லை என்பதால் பொது சின்னமாக ஆட்டோ சின்னத்தை வழங்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்கள். அதனால் விஜய் ரசிகர்கள் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட முடிவெடுத்துள்ளனர். அதோடு, அனைவருமே விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி மற்றும் விஜய்யின் புகைப்படங்களை பயன்படுத்தி தேர்தல் களத்தில் இறங்குகிறார்கள்.