சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் |
சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்திற்கு பிறகு பல இயக்குனர்களிடம் கதை கேட்டு உள்ள ரஜினி இன்னும் தனது அடுத்த படம் குறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை. இந்த நேரத்தில் தற்போது ரஜினி நடிக்கும் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க, தாணு தயாரிப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. தற்போது சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அதையடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்குகிறார். அதனால் அந்த படத்தை முடித்ததும் ரஜினி நடிக்கும் படத்தை அவர் இயக்குவார் என்று கூறப்படுகிறது.