டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

நடிகர் கவுதம் கார்த்திக், மஞ்சுமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில வாரங்களாகவேசெய்திகள் வைரலாகி வருகிறது. அதோடு மஞ்சிமாவின் பிறந்தநாளுக்கு கவுதம் கூறிய வாழ்த்து செய்தியும் வைரலானது. அதையடுத்து அவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நேரத்தில் நடிகை மஞ்சிமா மோகன் அளித்துள்ள ஒரு பேட்டியில், கவுதம் கார்த்திக்கின் காதலை நான் ஏற்கவில்லை. என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் முக்கிய சம்பவங்களை யாரிடத்திலும் நான் மறைத்ததில்லை. சின்ன விஷயமாக இருந்தாலும் அதை வெளிப்படையாகக் கூறி வருகிறேன். அப்படி இருக்கும்போது திருமணம் போன்ற பெரிய நிகழ்வுகளை மறைக்க வேண்டியதில்லை. திருமணம் குறித்த தகவல் வெளியான போது எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. நான் அதை கண்டுகொள்ளவில்லை. இது போன்ற செய்திகள் வெளியாகி வந்தபோது எனது பெற்றோரின் ரியாக்சன் என்னவாக இருக்குமோ என்று அதிர்ச்சியுடன் இருந்தேன். ஆன போதிலும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.