மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
ரஜினியின் தர்பார், அண்ணாத்த படங்கள் எதிர்பார்த்தபடி ஹிட் அடிக்கவில்லை. அதன் காரணமாக தனது 169வது படத்தை எப்படியாவது சூப்பர் ஹிட் படமாக கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார் ரஜினி. அதன் காரணமாகவே கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வந்த நெல்சன் இயக்கத்தில் அடுத்து கமிட்டானார் ரஜினி. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
ஆனால் தற்போது பீஸ்ட் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் ரஜினி குழப்பத்தில் இருப்பதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாக இருக்கிறது. அதோடு ரஜினியின் 169வது படத்தை நெல்சனை வைத்தே இயக்கலாமா? இல்லை இயக்குனரை மாற்றிக் கொள்ளலாமா? என்று தயாரிப்பு நிறுவனம் ரஜினியிடம் ஒரு கோரிக்கை வைத்தது போன்றும் ஒரு தகவல் சோசியல் மீடியாவில் பரவிக் கொண்டு வருகிறது.
ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ரஜினியின் 169 ஆவது படத்தை நெல்சன் இயக்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால் இதுபோன்ற செய்திகளை பீஸ்ட் படத்தைப்பார்த்து அதிருப்தி அடைந்த ரஜினி ரசிகர்களே வெளியிடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.