தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இந்திய அளவில் பாலிவுட்டில் எடுக்கப்படும் ஹிந்திப் படங்கள்தான் வசூல் ரீதியாக பல சாதனைகளைப் படைக்கும். ஆனால், இந்த 2022ம் வருடத்தில் இரண்டு தென்னிந்தியப் படங்கள் தான் வசூல் சாதனை படைத்துள்ளது. 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' இரண்டு படங்களுமே மிகப் பெரும் வசூலைக் குவித்தது.
இது குறித்து ஏற்கெனவே ராம்கோபால் வர்மா சில பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இப்போது மீண்டும் கிண்டலான ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். “தெலுங்கு, கன்னடப் படங்கள் ஹிந்திப் படங்களை கோவிட் வைரஸ் போல நோய்த் தொற்றுக்கு ஆளாக்கிவிட்டன. பாலிவுட் விரைவில் தடுப்பூசியுடன் வரும் என எதிர்பார்க்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகரான ஷாகித் கபூர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'ஜெர்சி' படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியடைந்துவிட்டது. கடந்த சில மாதங்களாகவே பாலிவுட்டில் 'காஷ்மீர் பைல்ஸ்' தவிர வேறு எந்தப் படமும் வசூலைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.