பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! | 'கூலி' படத்தின் வியாபாரம் : கோலிவுட் வட்டாரத் தகவல் | இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா | கூலி முதல் ஷோ எங்கே தொடங்குகிறது? இதுவரை 11 லட்சம் டிக்கெட் விற்பனை | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தை எதிர்த்து வழக்கு | அன்று ரஜினி படத்தில் அவரது மகன், இன்று அவருடன் போட்டி | பிளாஷ்பேக் : தஸ்தாவெஸ்கி வாழ்க்கையின் தாக்கத்தில் உருவான 'முதல் மரியாதை' | தமிழ் ரசிகர்கள் திறமையை அங்கீகரிப்பவர்கள் : அர்ஷா பைஜு | பிளாஷ்பேக் : நம்பியாரை நாயகன் ஆக்கிய 'கல்யாணி' |
மகாநடி படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா, சமந்தா மீண்டும் இணைந்து நடித்துவரும் படம் குஷி. தமிழ், தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் சிவா நிர்வனா இயக்குகிறார். இந்த படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வகாப் என்பவர் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் துவங்கி நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இதுபற்றிய தகவலை தெரியப்படுத்தியுள்ள இயக்குனர் சிவா நிர்வனா, படப்பிடிப்பு சிறப்பாக இதை பெற்றதற்காக விஜய் தேவரகொண்டா, சமந்தாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக சமந்தா காஷ்மீரில் பல இடங்களை சுற்றிப்பார்த்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தாரே அது இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சமயத்தில்தான். அதேபோல விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் தங்களது பிறந்த நாட்களையும் அங்கே கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.