துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் தொழிலதிபர் சரவணன் ஹீரோவாக களமிறங்கி உள்ள படம் ‛தி லெஜெண்ட்'. ஊர்வசி ரவுட்டாலா, பிரபு, விஜயகுமார், விவேக், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் சில பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு விஞ்ஞானி வேடத்தில் சரவணன் நடித்திருப்பது தெரிகிறது. தனது கண்டுபிடிப்புகள் ஏழை எளிய மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் வில்லன் கூட்டம் அதை அபகரிக்க திட்டமிடுகிறது. இதையடுத்து விஞ்ஞானியான சரவணன் வில்லனுடன் மோதுகிறார். முடிவில் என்ன நடக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதை என டிரைலரை பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. 3.33 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டிரைலரில் ஆக்ஷன், செண்டிமெண்ட், ரொமான்ஸ், காமெடி என கலந்து கலர்புல்லாக ஒரு முழு நீள கமர்ஷியல் படமாக எடுத்துள்ளனர். இந்த டிரைலர் யுடியூப்பில் 52 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று ரசிகர்களை கவர்ந்துள்ளது.