பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தன்னை நடிகராக அறிமுகப்படுத்தியவரின் இயக்கத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைப்பாளராகப் பணிபுரிவது ஒரு சுவாரசியமான விஷயம்தான். அவர் நடிகராக இருந்து இசையமைப்பாளராக மாறிய தமன்.
ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் தமன். இசைக்குடும்பத்தில் பிறந்த தமன் அதற்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டுமே கவனம் செலுத்தினார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இசையமைத்திருப்பவர் தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
அடுத்த ஆண்டு அவருக்கு இரண்டு மொழிகளிலும் இரண்டு முக்கியமான படங்கள் வெளிவர உள்ளன. ஒன்று ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் படம். மற்றொன்று வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம். இந்த இரண்டு படங்களுக்கும் தமன் தான் இசை.
அடிக்கடி தனது படங்கள் பற்றி அப்டேட் கொடுக்கும் தமன், ஷங்கர் - ராம்சரண் படம் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார். “ஆர்சி 15 படத்தின் இசைக்கோர்வைகள், சூப்பர் திறமைசாலி மனிதரான ஷங்கர் சாருடன்… நமது அன்பான ராம்சரண் காருவுடன் அற்புதமான பயணம் இதுவரையில்…” எனக் குறிப்பிட்டுள்ளார்.