'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் |

கொரோனா வந்த இந்த இரண்டாண்டு கால கட்டத்தில் ஓடிடி நிறுவனங்கள் மிகவும் பிரபலமடைந்தன. தியேட்டர்களில் வெளியிடாமல் சில படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட்டார்கள். அதற்கு முதலில் எதிர்ப்பு வந்து பிறகு அடங்கிப் போனது. அதன்பின்பு ஒரு படம் தியேட்டர்களில் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்பதை அமல்படுத்தினார்கள். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதைத்தான் பின்பற்றி வந்தார்கள்.
படம் வெளியான ஒரு மாதத்தில் ஓடிடி தளங்களில் வந்துவிடுவதால் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்தது. நான்கு வாரங்கள் காத்திருப்பதை அவர்கள் பெரிதாக நினைக்கவில்லை.
இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அது குறித்து புதிய அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி வரும் ஜுலை 1ம் தேதி முதல் தியேட்டர்களில் படம் வெளியான 50 நாட்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளார்கள்.
இதனால் ஓடிடி உரிமைக்கான விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டர்களில் வரவேற்பு இல்லாத படங்களை உடனடியாக ஓடிடி தளங்களில் வெளியிட அந்நிறுவனங்கள் நல்ல விலையைத் தருகின்றன. இப்படி 50 நாட்கள் கட்டுப்பாடு கொண்டு வந்தால் தியேட்டர்களில் ஓடாத படங்கள் சிக்கலை சந்திக்க வேண்டி வரும் என்றும் சிலர் கருதுகிறார்கள்.
தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுகளை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை பின்பற்றுமா என்பது இனிமேல்தான் தெரியும்.