‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

முதல்வர் ஸ்டாலின் வாரிசான உதயநிதி ஸ்டாலின் நடிகர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். உதயநிதியின் நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் தற்போது தமிழ் சினிமாவில் சில பல முக்கிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டில் அந்த நிறுவனம் வெளியிட்ட, 'எப்ஐஆர், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம்' ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். இவற்றில் 'விக்ரம்' படம் மெகா வசூல் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் உதயநிதியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என ஒரு பக்கம் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதே சமயம், அவர்களது நிறுவனம் வெளியிடும் படங்களின் வசூலை தியேட்டர்காரர்கள் சரியாகக் கொடுத்து விடுவதாகவும் தகவல் உள்ளது. 'விக்ரம்' வெற்றி விழாவில் கூட இந்த நேர்மை இருந்தால் தமிழ் சினிமா மாறும், நானும் கை கொடுக்கிறேன் என கமல்ஹாசன் மேடையிலேயே பாராட்டினார்.
தங்களைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்க ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டு வெற்றி பெற்ற படங்கள் அனைத்திற்காகவும் ஒரு வெற்றி விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம். அதில் கமல்ஹாசன், விஜய், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என பலரையும் கலந்து கொள்ள வைக்கவும் பேசி வருகிறார்களாம். முதல்வர் ஸ்டாலின் சம்மதித்தால் அவரது தலைமையில் அந்த விழாவை நடத்தவும் முடிவு செய்துள்ளார்களாம்.