ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கன்னடத்தில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற 'முப்தி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பத்து தல' படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடித்து வருகிறார்கள். 2019ல் இப்படத்தை முதலில் கன்னடத்தில் இயக்கிய நார்தன் இயக்கினார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பிறகு சில பல காரணங்களால் படப்பிடிப்பு நின்று போனது.
படம் மீண்டும் நடக்குமோ நடக்காதோ என்ற நிலையில் இயக்குனரை மாற்றினார்கள். 'சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிம்புவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி படப்பிடிப்பை மீண்டும் கடந்த மாதம் ஆரம்பித்தார்கள். ஒரு கட்டமாக படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்ட நிலையில் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, அவரை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் சென்றார்கள். அவர் நலமுடன் தற்போது திரும்பிவிட்டார்.
இந்நிலையில் படப்பிடிப்பை மீண்டும் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். நாளை முதல் இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் ஆரம்பமாக உள்ளது. இந்த முறையும் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். மீண்டும் வேறு எந்தத் தடங்கலும் வராமல் நடந்து முடிந்தால் சிறப்பு.