பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் |
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது சென்னை அருகே, சரித்திரப் புகழ் வாய்ந்த மாமல்லபுரம் நகரில் நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு அதன் தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. தொடக்க விழாவுக்கான கலை நிகழ்ச்சிகளை திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கினார்.
மிகவும் பிரம்மாண்டமாக முப்பரிமாண முறையில் இடம் பெற்ற கலை நிகழ்ச்சிகள் பலரது பாராட்டைப் பெற்றது. இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள், விளையாட்டுப் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அவர்களில் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் விக்னேஷ் சிவனை அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்து விக்னேஷ் சிவன், “நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய நிகழ்வு. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே தனிப்பட்ட முறையிலும், நிகழ்ச்சி முடிந்த பின்னர் தொலைபேசியிலும் பாராட்டிய ரஜினி சாருக்கு நன்றி. உங்களின் குரலைக் கேட்டதும், பாராட்டியதும் மிகவும் மகிழ்ச்சிகரமானது. அந்நாளை மேலும் அழகாக்கியதற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.