ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் உருவாகி சமீபத்தில் வெளியான சீதாராமம் திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து தனது கனவு படம் என துல்கர் சல்மான் ஏற்கனவே குறிப்பிட்ட 'கிங் ஆப் கோத' என்கிற படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இவரது தந்தை ஜோஷி துல்கர் சல்மானின் தந்தையான மம்முட்டியை வைத்து கிட்டத்தட்ட முப்பது படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் சமந்தா நடித்திருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் என ஒன்று கூட அதில் இல்லை. அதையடுத்து இருவரும் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்திருந்தனர். அந்தவகையில் 'கிங் ஆப் கோத' படத்தில் சமந்தா நடிக்கும் பட்சத்தில் துல்கருடன் இணைந்து நடிக்கும் முழு நீளப்படமாகவும், மலையாளத்தில் அவர் அறிமுகமாகும் முதல் படமாகவும் இது அமையும் என்று சொல்லலாம்.