ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு இபிஎஸ், உதயநிதி, பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி |
சூர்யா இயக்கி, தயாரித்திருந்த படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கி இருந்தார். இந்த படத்தில் வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வழிபடும் அக்னி குண்டம், மகாலட்சுமி, மற்றும் வன்னியர்களின் தலைவர்களில் ஒருவரான குருவின் பெயரை இழிவுபடுத்தியும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து வேளச்சேரி போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உடனே நீக்கப்பட்டு விட்டதாகவும், மேலும் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.