டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கன்னடத்தில் ஒரு சிறிய படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா அதற்கு அடுத்து தெலுங்கில் கீதாகோவிந்தம் என்கிற படத்தில் அதிலும் குறிப்பாக அது இடம்பெற்ற ‛இன்கேம் காவாலே' என்கிற ஒரே பாடலில் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா கடந்த வருடம் வெளியான புஷ்பா படத்தின் மூலம் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார்.
தற்போது சமீபத்தில் அமிதாப்பச்சனுடன் ராஷ்மிகா இணைந்து நடித்த குட்பை என்கிற திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து நடித்து வந்த ராஷ்மிகா தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'எப்போது பண்டிகை என்றாலும் எனது குடும்பத்துடன் ஒன்றாக கொண்டாடுவதை தவிர்க்கவே மாட்டேன். அதுமட்டுமல்ல தீபாவளி உள்ளிட்ட முக்கியமான பண்டிகைகளுக்கு முன்பாக தங்கம், வெள்ளி வாங்குவதை ஒரு சென்டிமெண்ட் ஆகவே கடைபிடித்து வருகிறேன்.
தற்போது என்னுடைய புதிய படங்களின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவும் இதேபோன்று தங்கம் அல்லது வெள்ளியை வாங்கி வருகிறேன். எங்கள் வீட்டில் எனது தந்தை என்னையும் எனது சகோதரியையும் பற்றி கூறும்போது நீங்கள் தான் இந்த வீட்டின் லட்சுமி என்று குறிப்பிடுவார். அது எனக்கு மிக பெருமையாக இருக்கும். அந்த லட்சுமியை வரவேற்கும் விதமாகத்தான் இப்படி பண்டிகைக்கு முன்பாக தங்கம் வெள்ளி வாங்குகிறேன்” என்று கூறுகிறார் ராஷ்மிகா.