78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? |
மாநாடு படத்தை அடுத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கிய வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, அரவிந்தசாமி வில்லனாக கமிட்டாகி இருக்கிறார். ஏற்கனவே மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமி அதன் பிறகும் சில படங்களில் நடித்தவர், இப்போது மீண்டும் இந்த படத்தில் அதிரடியான வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது இவர்கள் நடிக்கும் ஆக்சன் காட்சியை ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து படமாக்கி வருகிறார்கள். இந்த சண்டைக் காட்சியை ஸ்டன்ட் மாஸ்டர் மகேஷ் மேத்யூ படமாக்கி வருகிறார். திரில்லர் மற்றும் பீரியட் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கிறார்கள்.