துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கடந்த 2002ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் பாபா. இந்த படத்திற்கு கதை எழுதி தயாரித்து நடித்தார் ரஜினி. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு அப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு மீண்டும் திரைக்கு வரவுள்ளது. அந்த வகையில் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி பாபா படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சமீபகாலமாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீசாகும்போது அதிகாலை நான்கு மணி காட்சி திரையிடப்படு வருகிறது. அந்த வரிசையில் ரஜினியின் பாபா படத்தின் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட உள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, நம்பியார், விஜயகுமார், சுஜாதா உள்பட பலர் நடித்து இருந்தனர்.