கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே | விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் | நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு |
கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்னத்தின் கடல் படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். அப்போதிலிருந்து இப்போது வரை தனி ஹீரோவாகவே பல படங்களில் நடித்துள்ளார் கவுதம் கார்த்திக். இருந்தாலும் அவருக்கென சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் முதன்முறையாக சிம்புவுடன் இணைந்து பத்து தல என்கிற படத்தில் நடித்துள்ளார் கவுதம் கார்த்திக்.
இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் கேங்க்ஸ்டர் பாணியில் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் கடந்த சில நாட்களாக கவுதம் கார்த்திக் இந்த படத்தில் தனக்கான டப்பிங்கை பேசி வந்தார். தற்போது டப்பிங் பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.