23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் விமல், இனியா, முனீஸ்காந்த், பாலா சரவணன் ஆகியோர் நடிப்பில் உருவான வெப்சீரிஸ் விலங்கு. ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ் சஸ்பென்ஸ் கதையில் உருவாகியுள்ளது.
பரபரப்பான கதைகளைத்துடன் வெளியான இந்த வெப் சீரிஸ் தொடர் தற்போது தொலைக்காட்சியில் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்ட நேர திரைப்படமாக ஒளிபரப்பாக போகும் முதல் வெப் சீரிஸ் என்ற பெருமையையும் விலங்கு சீரிஸ் பெற உள்ளது. ஆமாம் வரும் ஞாயிறு அன்று மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த வெப் சீரிஸ் திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த என்டர்டெய்ன்மென்ட் உலகிற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கலாம்.