கவின் நடித்துள்ள 'கிஸ்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது! | 'லியோ' படத்தில் உயிரிழந்த மடோனாவின் கேரக்டர் 'பென்ஸ்' படத்தில் உயிர் பெறுகிறதா? | சூர்யா 46வது படத்தின் பாடல் பயங்கரமாக வந்திருக்கு! - ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட தகவல் | சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி! கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ | உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பில் பவன் கல்யாண் | தெலுங்கு இயக்குனர்களுடன் மூன்றாவது முறை கூட்டணியில் சூர்யா | 150 நாள் படப்பிடிப்பு நடந்த 'இரண்டு வானம்' | 'பரியேறும் பெருமாள்' முதல் சாய்ஸ் அதர்வா | பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன் செய்தாரா அதுல்யா | பெண் வேடத்தில் நடித்த விஜய் டிவி புகழ் |
ஹாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெர்மி ரென்னர். அவென்ஜர்ஸ் கேரக்டர்களில் ஒன்றான ஹாவ்க் கேரக்ரில் நடித்து புகழ்பெற்றார். இது தவிர மேலும் பல ஹாலிவுட் படங்களில் நடித்தார். கடந்த 2008ம் ஆண்டு வெளியான 'தி ஹர்ட் லாக்கர்' படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். அதேபோல 2010ம் ஆண்டு வெளியான 'தி டவுன்' படத்தின் சிறந்த துணை நடிகருக்காக ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.
இவர் கடந்த 2ம் தேதி விபத்து ஒன்றில் சிக்கினார். புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு காரில் வீடு திரும்பியபோது பனிப்புயலில் சிக்கி கார் விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர், படுகாயமடைந்த ரென்னரை மீட்டு, அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது உடல்நலம் தேறி உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டு, “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.