ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி | பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 'ஏ' படங்கள் | பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் புகார்கள் | பிளாஷ்பேக்: ரீ பிக்அப் ஆன முதல் படம் | 'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை |
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மித்ரன் ஜவஹர் தொடர்ந்து குட்டி, உத்தமபுத்திரன் என அவரை வைத்தே படங்களை இயக்கி வந்தார். கடந்த வருடம் இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. கடந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற வெகுசில படங்களில் திருச்சிற்றம்பலம் படமும் ஒன்று.
இந்த நிலையில் மித்ரன் ஜவஹர் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள மித்ரன் ஜவஹர், எனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் இப்போதுதான் தயாராகி வருகிறது. தற்போது எந்த படத்தையும் நான் இயக்கவில்லை. இதுகுறித்து வரும் எந்த செய்திகளையும் நம்ப வேண்டாம் எனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ளார்.