சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் |
கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வந்தபோது சில பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் இந்த படத்தை கிடப்பில் போட்டது லைகா நிறுவனம். இதன் காரணமாக ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கத் தயாரானார் ஷங்கர். இதையடுத்து அவருக்கும் லைகா நிறுவனத்திற்க்குமிடையே பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்ற வரை சென்றது. அதில் ஷங்கருக்கு சாதகமான தீர்ப்பு வரவே ராம்சரண் நடிக்கும் 15 ஆவது படத்தை இயக்கி வந்தார். அந்த படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது ஷங்கருக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையிலான பிரச்சினை சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டதை அடுத்து இந்தியன்- 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
இதன் காரணமாக தற்போது இந்தியன்-2, ராம்சரண் -15 ஆகிய இரண்டு படங்களையும் மாறி மாறி இயக்கி வருகிறார் ஷங்கர். இதனால் வேகமாக நடைபெற்று வந்த ஆர்சி -15 படப்பிடிப்பு தற்போது தாமதமாகி வருகிறது. அதோடு ஆர் சி 15 படத்தில் விஷுவல் எபக்ட்ஸ் மற்றும் எடிட்டிங் செய்முறை பல மாதங்கள் நீடிக்க என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் முடிவதற்கு அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் என்பதால் தற்போது அப்படத்தை 2024 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு முடிவு செய்திருப்பதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர் சி -15 படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானியும், ஒரு முக்கிய வேடத்தில் அஞ்சலியும் நடித்து வருகிறார்.