2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் |

கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருபவர் இயக்குனர் செல்வராகவன். அதே சமயம் கடைசியாக அவர் இயக்கிய எஸ்ஜே சூர்யா மற்றும் தனுஷ் நடித்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஆனால் கடந்த வருடம் வெளியான பீஸ்ட் மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்கள் மூலம் ஒரு நடிகராக தன்னை உருமாற்றிக்கொண்டார் செல்வராகவன். இரண்டு படங்களிலும் அவரது நடிப்பிற்கு பாராட்டுக்களும் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து இயக்குனர் மோகன்ஜி டைரக்ஷனில் உருவாகி வரும் பகாசுரன் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் செல்வராகவன்.
இந்த நிலையில் தற்போது விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடிக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் சுனிலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அவரது கதாபாத்திர போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில்தான் செல்வராகனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.